பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மைக்கேல் ஜாக்சனின் நினைவு நாள் - கோடிக்கணக்கான ரசிகர்களை, ஈர்த்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி

Jun 25 2016 11:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாப் இசை உலகில் கொடிகட்டிப் பறந்த மைக்கேல் ஜாக்சனின், நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை, தனது இசையாலும், பாடலாலும், நடனத்தாலும் ஈர்த்த இந்த மாபெரும் கலைஞன் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு... மைக்கேல் ஜாக்சன்... தனது வசீகரக் குரலாலும், நளினமான நடன அசைவுகளாலும் உலகம் முழுவதும் ரசிகர்களை மெய்மறக்கச் செய்த மாபெரும் இசைக்கலைஞன். பாப் பாடகர், நடன இயக்குநர், பாடல் ஆசிரியர் என பன்முகத் திறமை கொண்டவர்.

1958-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி பிறந்த இந்த மாபெரும் கலைஞனின் கலைப்பயணம் 1964-ல் தொடங்கியது. பாடல் எழுதி, இசையமைத்து அதற்கேற்றார்போல் நடனம் ஆடி, இடைஇடையே நடிப்பையும் கலந்து மைக்கேல் ஜாக்சன் படைத்த "பாப்" புதிய நடனம், அவரை பாப் இசை உலகில் தனி நட்சத்திரமாய் ஜொலிக்க வைத்தது.

1980-களின் ஆரம்பத்தில் பாப் இசை உலகில் புகழ்பெற்ற பாடகராக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன், செல்வாக்குப் பெற்ற கருப்பின இசைக்கலைஞராக வலம்வரத் தொடங்கினார். கடந்த 1982-ல் அவர் உருவாக்கிய "திரில்லர்" இசை ஆல்பம், ரசிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதுடன், ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

கிங் ஆஃப் பாப் என்றும் எம்.ஜெ. என்றும் ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின், 6 இசை ஆல்பங்கள் உலகெங்கும் அமோக வரவேற்பை பெற்றன. மைக்கேல் ஜாக்சனின் ரோபாட், மூன்வாக் போன்ற நடன அசைவுகள் இளைஞர்களிடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

பாப் உலகில் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்த மைக்கேல் ஜாக்சனின் மணிமகுடத்தை, பல கிராமிய விருதுகளும், அமெரிக்க இசை விருதுகளும் அலங்கரித்தன. பல சமூக சேவைகளுக்காக உலகம் முழுவதும் கச்சேரிகளை அரங்கேற்றி நிதியுதவி திரட்டி மனிதநேயமிக்க மனிதராகவும் வலம்வந்த மைக்கேல் ஜாக்சனுக்கு, அவர் தனது முகத்தில் செய்து கொண்ட பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளே ஆபத்தாக அமைந்தன.

சுவாசக் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ம் தேதி லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள தனது பண்ணை வீட்டில் காலமானார். மண்ணுலகை விட்டு மறைந்தாலும், அழியா புகழ்பெற்ற இசையாலும், நடனத்தாலும் இன்றளவும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் மனங்களில் நீங்கா இடம்கொண்டுள்ளார் மைக்கேல் ஜாக்சன்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00