ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை அடுத்து, ஏற்படும் நெருக்கடியை சமாளித்து ஸ்பெயின் நாட்டின் நலன்களை பாதுகாக்க வலுவான அரசு வேண்டும் : தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தற்காலிக பிரதமர் வலியுறுத்தல்

Jun 25 2016 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை அடுத்து, ஏற்படும் நெருக்கடியை சமாளித்து ஸ்பெயின் நாட்டின் நலன்களை பாதுகாக்க வலுவான அரசு வேண்டும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அந்நாட்டின் தற்காலிக பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டில் முதல் கட்ட பொதுத் தேர்தல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 2-வது கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனையொட்டி, Madrid நகரில் நேற்று நடைபெற்ற மக்கள் கட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அக்கட்சி தலைவரும், தற்காலிக பிரதமருமான Mariano Rajoy கலந்துகொண்டு பேசினார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் ஏற்படும் நெருக்கடியை சமாளித்து, நாட்டின் நலன்களை பாதுகாக்க வலுவான அரசு அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியான Podemos கட்சி தலைவர் Pablo Iglesias தனது பிரச்சாரத்தின் போது, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதை அடுத்து, ஐரோப்பாவில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அவரது கருத்தை கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

இத்தேர்தலில் மக்கள் கட்சி அதிக இடங்களைப் பிடித்து முதலிடமும், Podemos கட்சி 2-வது இடமும், சோஷலிஸ்ட் கட்சி 3-வது இடமும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00