ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் பங்கு சந்தைகளில் கடும் சரிவு

Jun 25 2016 8:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் பங்கு சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் இழப்பு நேரிட்டுள்ளது. பிரிட்டிஷ் நாணயமான Sterling 31 ஆண்டுகளுக்கு பின்னர் முதன்முறையாக கடும் சரிவை சந்தித்துள்ளது.

பிரிட்டன், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, உலகம் முழுவதிலும் உள்ள பங்கு சந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்த சரிவால், மொத்தம் சுமார் 2 ஆயிரம் கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்கு சந்தைகளில் இருந்து பெரும்பாலான முதலீடுகள் தங்கத்திற்கு மாற்றப்பட்டதால், இந்த இழப்பு ஏற்பட்டிருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க தலைமை வங்கி ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, வட்டி விகிதங்களை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் 10 ஆண்டு அரசு பத்திரங்களுக்கான வருவாய் சுமார் 1 புள்ளி நான்கு சதவிதம் குறைந்துள்ளது. இதேபோன்று, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளின் பங்கு பத்திரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாக இங்கிலாந்து வங்கி, ஐரோப்பிய மத்திய வங்கி, சீன மக்கள் வங்கி ஆகியவை உறுதி அளித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00