நெதர்லாந்தில் உள்ள கீதூர்ன் கிராமம் அந்நாட்டின் வெனிஸ் என அழைப்பு : கிராமம் மொத்தமும் தண்ணீரால் சூழப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சி

May 27 2016 7:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

நெதர்லாந்தில் உள்ள கீதூர்ன் கிராமம் அந்நாட்டின் வெனிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த கிராமம் மொத்தமும் தண்ணீரால் சூழப்பட்டு, இயற்கை எழில் கொஞ்சும் வகையில் காட்சியளிக்கின்றது.

18 ஆம் நூற்றாண்டில் உருவான கீதூர்ன் கிராமத்தில் சாலைகளோ கரும்புகை கக்கும் வாகனங்களோ இல்லை. இந்த கிராமத்தில் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டிற்கு செல்ல அங்கு அமைக்கப்பட்டுள்ள பாலங்கள் அல்லது படகையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள ஓடைகள் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக 2,600 பேர் வசித்துவரும் இந்த இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து குடியிருப்புகளும் குட்டித்தீவுகளாகவே காட்சி தருகின்றன. குளிர்காலத்தின்போது, இந்த கிராம மக்கள் பனிச்சறுக்கு விளையாடுவது ஒரு தனிச்சிறப்பாகும். கிராமங்களுக்கு வருகை தரும் வெளியூர் பயணிகள் அனைவரும், கிராமத்தின் நுழையும் முன்பே, தங்களது வாகனங்களை நிறுத்தவேண்டுமென கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சத்தமில்லாத படகு சவாரி, புகையில்லா சூழல் உள்ளிட்டவைகளை கொண்ட இந்த கிராமம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில், சிறந்த கிராமமாக திகழ்ந்து வருகிறது. சில மீட்டர் ஆழம் கொண்ட இந்த நீர்ப்பகுதியை, இங்குள்ள துறவிகளே ஆழப்படுத்தி அதை படகு சவாரிக்கு உகந்ததாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00