ஆழ்கடல் பகுதியில் நடமாடும் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து, உடனுக்குடன் தகவல் அளிக்கும் தானியங்கி போர்க்கப்பல்கள் - சோதனை ஓட்டத்தை தொடங்கியது அமெரிக்கா

May 3 2016 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆழ்கடல் பகுதியில் நடமாடும் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து, உடனுக்குடன் தகவல் அளிக்கும் தானியங்கி போர்க்கப்பல்களை அமெரிக்கா வடிவமைத்துள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்கியுள்ளது.

தானியங்கி விமானங்கள், ரோபாடிக் போர்வீரர்கள் மற்றும் தானியங்கி போர்க்கப்பல்களை வடிவமைப்பதில் அமெரிக்கா முன்னணி வகித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, கலிஃபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள San Diego துறைமுகத்தில், 40 மீட்டர் நீளம் கொண்ட புதிய தானியங்கி போர்க்கப்பல் தற்போது வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பல், ஆழ்கடல் பகுதியில் ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து, உடனுக்குடன் தகவல் அளிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம், அண்டை நாடுகளின் கடல்வழி ஊடுருவல்கள் தவிர்க்கப்படுவதுடன், கடல் எல்லைகளின் பாதுகாப்பையும் இவ்வகை கப்பல்கள் உறுதி செய்கின்றன. மேலும் இக்கப்பலின் செயல்பாடுகள் அமெரிக்காவின் பெண்டகன் ராணுவத் தலைமையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஆளில்லா விமானங்களை கையாளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இக்கப்பல்களில் ஆயுதங்கள் பொருத்தப்பட்டு தானே கடல் எல்லை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் வகையில் மாற்றியமைக்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00