வடகொரியாவில், உளவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் அமெரிக்கருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிப்பு

Apr 30 2016 8:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

வடகொரியாவில், உளவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் அமெரிக்கர் ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொரியா இரண்டாக பிரிந்து வடகொரியா, தென்கொரியா என்றானதிலிருந்தே, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்பட்டு வருவதால், இந்த இரு நாடுகளுக்கு எதிராக வடகொரியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக வடகொரியா செல்லும் அமெரிக்கர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மாதம் வடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற அமெரிக்காவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், அந்நாட்டு அரசின் பிரச்சார கோஷம் அடங்கிய பொருளை திருட முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் 15 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் ஒரு அமெரிக்கர், வடகொரியாவில் உளவு குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டுள்ளார். 62 வயதான கிம் டாங் சுல் என்பவர் தென்கொரியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவர் கடந்த அக்டோபர் மாதம், வடகொரியாவில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவுக்காகவும், தென் கொரியாவுக்காகவும் வடகொரியாவில் உளவு பார்த்ததாகவும், ராணுவ ரகசியங்களை திருடியதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வைக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, கிம் டாங் சுல்லுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து வடகொரிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00