பிரசிலில் கண்கவர் அணிவகுப்புடன் நிறைவுபெற்ற கார்னிவல் திருவிழா - சம்பா நடன அணிவகுப்பில் 19-வது முறையாக வென்ற அணிக்கு சாம்பியன் பட்டம்

Feb 12 2016 8:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசிலில் கார்னிவல் எனப்படும் வருடாந்திர கேளிக்கை திருவிழாவில் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது. இதில், முதலிடத்தை பிடித்த பள்ளிக்கு சம்பா நடனப் பள்ளிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

Brazil நாட்டின் ரியோடி ஜெனிரோ நகரில் இந்த ஆண்டின் வருடாந்திர திருவிழாவையொட்டி, பாரம்பரிய சம்பா நடனம் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது. அங்குள்ள சம்பா நடன பள்ளிகள் சார்பில் கிரேக்க இதிகாச கடவுள் வாகனம் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றை குறிப்பிடும் வகையில், அலங்கார ஊர்திகளும், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இரவு முழுவதும் நடைபெற்ற பாடல், ஆடல் ஊர்வலத்தை லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர். சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக மிதிவண்டிகளை பயன்படுத்துதல், பசுமைக் காடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட நோக்கங்களை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளும், நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.

இந்த பேரணியில் 12 சம்பா நடன சங்கம் சார்பில் 70 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பிரசிலின் கிராமிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட Catenao Velosoவின் தலைமையில் நடைபெற்ற சம்பா நடன பேரணியில் Magueria பள்ளி அணி 19வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கான அறிவிப்பை வெளியிட்டதுடன் போட்டியாளர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00