சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா நெடுந்தூர ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவியது : வெற்றியை கொண்டாடும் வகையில் ராணுவத்தினர் அணிவகுப்பு

Feb 9 2016 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பொருட்படுத்தாமல், வடகொரியா, நெடுந்தூர Rockrt மூலம் வெற்றிகரமாக செயற்கைகோள் ஏவியதை கொண்டாடும் வகையில், அந்நாட்டு ராணுவத்தினரின் அணிவகுப்பு மற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

உலக நாடுகளின் எதிர்ப்பினை பொருட்படுத்தாமலும், சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தையும் மீறி, அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி, Kwang myong song என்ற செயற்கைகோளை, நெடுந்தூர Rockrt மூலம் வடகொரியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனை கொண்டாடும் வகையில், தலைநகர் Pyongyang-ல் பிரம்மாண்ட கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள், நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வண்ணமிகு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் இரவை பகலாக்குவதாக அமைந்திருந்தது.

முன்னதாக, Kim Il Sung சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினர் பங்கேற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளை, லட்சக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00