ஏமனில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள உள்நாட்டுப் போர் - தலைநகர் சனாவில் நடந்த சண்டையில் அப்பாவி மக்கள் 30 பேர் பலி

Feb 4 2016 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. நலைநகர் சனா அருகே நடைபெற்ற சண்டையில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகிவுள்ளது.

ஏமன் நாட்டில் அதிபர் அபத் ரப்போ மன்சூர் ஹாதிக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வந்த போராட்டம் உள்நாட்டு போராக மாறியது. ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டையில், இதுவரை சுமார் 6 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள தலைநகர் சனாவை நெருங்கிவிட்டதாகவும், கூடிய விரைவில் அந்நகரம் மீட்கப்படும் எனவும் அரசுப்படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சனாவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டாயிஸ் நகரில் இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 30 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00