சிரியா எல்லையில் ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு - வான்வெளி விதிகளை மீறியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு

Nov 24 2015 1:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் ரஷ்யா நாட்டுக்கு சொந்தமான ஜெட் விமானத்தை, துருக்கி போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துருக்கி - சிரியா எல்லைப்பகுதி அருகே ரஷ்யா நாட்டுக்கு சொந்தமான ஜெட் விமானம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்த துருக்கி போர் விமானங்கள், ஜெட் விமானத்தை சுட்டு வீழ்த்தின. துருக்கி நாட்டின் வான்வெளி விதிகளை ஜெட் விமானம் மீறியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டது தங்கள் நாட்டு விமானம் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்ய விமானத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அதனை மீறி தங்கள் வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பயணம் செய்த இரண்டு பேர் பாராசூட் மூலம் தப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது. முதலில் சிரியா நாட்டின் விமானம் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது, அந்த விமானம் ரஷ்ய நாட்டுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00