தற்கொலைப் படை தாக்குதல் நடத்தி வெள்ளை மாளிகையை தகர்ப்போம் : அமெரிக்காவுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பகிரங்க மிரட்டல்

Nov 20 2015 9:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

தற்கொலைப் படை மற்றும் கார் வெடிகுண்டுகள் மூலம் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவினை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து தனிநாடாக அறிவித்து, பல்வேறு பயங்கரவாதச் செயல்களை ஐ.எஸ். தீவிரவாதிகள் அரங்கேற்றி வருகின்றனர். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் சிரியாவுடன் இணைந்து அமெரிக்கா, ஃபிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதற்கு பதிலடி தரும் வகையில், ரஷ்ய விமானத்தை, ஐ.எஸ். தீவிரவாதிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்ததில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த வாரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதத்திற்கு 129 பேர் பலியாகினர்.

இந்நிலையில், அமெரிக்காவை மிரட்டும் வகையில் வீடியோ பதிவு ஒன்றினை தீவிரவாதிகள் ஈராக்கில் வெளியிட்டுள்ளனர். Paris Before Rome என்ற தலைப்பில் 6 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோ பதிவில், பாரீஸ் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, இதேபோன்று, தற்கொலைப் படை மற்றும் கார் வெடிகுண்டுகளைக் கொண்டு அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையை தகர்ப்போம் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் John Kirby குறிப்பிடுகையில், வீடியோ பதிவு குறித்து ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் John Kerry, உலகையே அச்சுறுத்திய அல்-கைதா தீவிரவாதிகளை ஒடுக்கியதுபோலவே, ஐ.எஸ். தீவிரவாதிகளும் விரைவில் ஒடுக்கப்படுவார்கள் என தெரிவித்தார். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேருவதற்காக வெளிநாட்டினர் சிரியா செல்ல உதவி வரும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த டிராத் அல்-ஜர்பா என்பவரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் 33 கோடி ரூபாய் பரிசளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00