அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம், அரசியல் பொருளாதார எல்லைகளைத் தாண்டி, வேட்பாளர்களின் தலைமுடி பற்றிய விவாதத்தை எட்டியுள்ளது

Aug 29 2015 10:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம், அரசியல் பொருளாதார எல்லைகளைத் தாண்டி, வேட்பாளர்களின் தலைமுடி பற்றிய விவாதத்தை எட்டியுள்ளது. இது அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடக் கூடிய தமது கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்க அங்குள்ள குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் தயாராகி வருகின்றன. குடியரசுக் கட்சிப் போட்டியாளர்களில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சிப் போட்டியாளர்களில் ஹிலரி கிளிண்டனும் முன்னிலை வகிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தை இருவரும் தொடங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம் நியூயார்க்கில் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், ஹிலரி கிளிண்டன் பொய்யானவர் என்றும், அவரது தலைமுடி கூட பொய்யானது என்றும் குறிப்பிட்டார். அத்துடன், தனது தலைமுடி உண்மையானது என்று நிரூபிக்கும் வகையில், கூட்டத்தில் இருந்து ஒரு பெண்மணியை வரவழைத்து, தனது தலைமுடியை இழுத்துப் பார்க்கச் சொல்லி நிரூபித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று Minnesotta மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஹிலரி கிளிண்டன் தனது தலைமுடி உண்மையானது தான் என்றார். அதனைத்தொடர்ந்து ஹிலரி கிளிண்டனின் பிரச்சாரத்தை ரசித்த கூட்டத்தினர், தங்களது வாக்கு தலைமுடிக்கு அல்ல. நல்ல தலைவருக்கே என முழக்கமிட்டு ஹிலரி கிளிண்டனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00