பொலியாவில் பேராசியர்கள் நியமனம் தொடர்பான அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு : பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பரபரப்பு

Jul 31 2015 7:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலியாவில் பேராசியர்கள் நியமன விவகாரத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வன்முறையில் முடிந்தது. இச்சம்பவம் தொடர்பாக 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் கல்லூரி பேராசியர்களை நியமனம் செய்வதில் அந்நாட்டு அரசு புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது. தகுதித் தேர்வு இல்லாமல் பேராசிரியர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்தது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், Cochabamba நகரில் உள்ள San Simon பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக அலுவலகத்திற்குள் புகுந்த அவர்கள் அங்கு தங்கியிருந்த பேராசிரியர்களை வெளியேற்ற, பட்டாசுகளை கொளுத்தியபடியும், வெடிமருந்துகளை வீசியபடியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பதிலுக்கு கலவரத் தடுப்பு போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி மாணவர்களை கலைந்து போகச் செய்தனர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அந்த பல்கலைக்கழக வளாகமே போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவம் தொடர்பாக 25 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00