நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு - போக்குவரத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவத்தின் உதவியுடன் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

Jul 31 2015 6:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாளத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிந்தோர் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. பலர் காணாமல் போயிருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேபாளத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தலைநகர் காத்மண்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான கட்டடங்களும் பெரும் சேததத்துக்குள்ளாயின. இந்த பாதிப்பிலிருந்து அந்நாட்டு மக்கள் முழுவதுமாக மீளாத நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காஸ்கி மாவட்டத்தில், நேற்று பிற்பகலில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இவற்றில் சிக்கி பெண்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், பாதுரே பகுதியில் நேரிட்ட நிலச்சரிவில், 2 பெண்கள் உட்பட மேலும் 6 பேர் உயிரிழந்தனர். லம்லே பகுதியில் காணாமல் போனவர்களில் சிலர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்தது. காணாமல் போன மேலும் பலரது நிலைமை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலச்சரிவால் போகாரா - பக்லங் நெடுஞ்சாலை பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு ராணுவத்தினர் உதவியுடன் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00