கனடாவில் கருப்பினத்தவர் இருவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பு

Jul 28 2015 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கனடாவில் கருப்பினத்தவர் இருவரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு, கண்டனம் தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துகொண்டு, அந்நாட்டு காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

கனடாவில், தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்த Andrew Loku என்ற கருப்பினத்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 5-ம் தேதி சுட்டுக் கொன்றனர். கையில் சுத்தியலை வைத்துக் கொண்டு, அவர் தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், Andrew Loku மனநிலை சரியில்லாதவர் என்றும், அவரை வேண்டுமென்றே போலீசார் சுட்டுக் கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு, Brampton என்ற இடத்தில் Jernaine Carby என்ற கருப்பினத்தவரும் போலீசாரால் மர்மமான முறையில் சுடப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, கருப்பினத்தவரை குறி வைத்து, போலீசார் தாக்குதல் சம்பவங்களை நடத்துவதாகக் கூறி, அந்த இனத்தைச் சேர்ந்த பலர், Toronto-வில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர். கருப்பினத்தவர் மீதான தாக்குதலை உடனே நிறுத்தாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்தி, கனடா அரசுக்கு நெருக்குதலை ஏற்படுத்தப் போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00