நைஜீரியாவில் போகோஹாரம் தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம் - 150 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட பரிதாபம்

Jul 3 2015 10:34AM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியாவில் உள்ள மசூதிகளில், போகோஹாரம் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில், 150 பேர் உயிரிழந்தனர்.

நைஜீரியாவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் போகோஹாரம் தீவிரவாதிகள் அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களை கொன்று குவித்துள்ள தீவிரவாதிகள், நைஜீரியாவின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இதனால் அண்டை நாடுகளைச் சேர்ந்த ராணுவம் நைஜீரியாவுடன் இணைந்து போகோஹரம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், போர்னோ மாகாணத்தில் உள்ள குன்குவா உள்ளிட்ட 3 கிராமங்களில் சுமார் 50 தீவிரவாதிகள் புகுந்தனர். அப்பகுதியில் உள்ள மசூதிகளில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு தொழுகை நடத்திக்கொண்டிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். மேலும், வீடுகளிலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளின் இந்த கண்மூடித்தனமான தாக்குதலில் 150 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00