இந்தோனேஷியாவில், விமானப் படைக்குச் சொந்தமான விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் உட்பட 141 பேர் உயிரிழப்பு

Jul 1 2015 6:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேஷியாவில், விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று, குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதில், பொதுமக்கள் உட்பட 141 பேர் உயிரிழந்தனர். இதுவரை 66 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

12 பணியாளர்கள் மற்றும் 101 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானப் படையைச் சேர்ந்த Hercules ரக விமானம், சுமத்ரா தீவில் உள்ள Medan நகரில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட ஒரு சில வினாடிகளில் அந்த விமானம் வானில் வெடித்துச் சிதறி குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக விமானப்படை தலைமை தளபதி தெரிவித்தார். விமானம் விழுந்ததில், அப்பகுதியில் இருந்த கட்டிடங்கள் இடிந்தன. மேலும் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. விமான விபத்தில் உயிரிழந்தவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 66 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரின் சடலங்கள் விமான சிதைவுகளின் கீழ் சிக்கியிருப்பதால், அவற்றை மீட்க காலதாமதம் ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்ததால், கீழே இருந்த கட்டடங்களில் வசித்தவர்களில் 28 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00