அமெரிக்காவின் நியூயார்க் நகர சிறைச்சாலையிலிருந்து 3 வாரங்களுக்கு முன் தப்பிச் சென்ற 2 கைதிகளில் ஒருவரை கனடா எல்லை அருகே போலீசார் சுட்டு பிடித்தனர்

Jun 29 2015 12:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் நியூயார்க் நகர சிறைச்சாலையிலிருந்து 3 வாரங்களுக்கு முன் தப்பிச் சென்ற கைதிகளில் ஒருவரை, கனடா எல்லை அருகே போலீசார் சுட்டு பிடித்தனர்.

கடந்த 6-ம் தேதி நியூயார்க் நகர சிறைச்சாலையில் இருந்து David Sweat மற்றும் Richard Matt ஆகிய இருவர் தப்பிச் சென்றனர். அவர்களை ஆயிரத்து 300 போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கனடா எல்லை அருகே உள்ளூர் நேரப்படி, நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நடந்து சென்றதை Jay Cook என்ற போலீஸ் அதிகாரி பார்த்தார். உடனே அந்த நபரை நிற்கும்படி அதிகாரி உத்தரவிட்டார். போலீஸ் அதிகாரியை பார்த்ததும் David Sweat தப்பியோட முயற்சிக்கவே, அவரை நோக்கி 2 முறை அதிகாரி சுட்டார். இதில், காயமடைந்த David Sweat கைது செய்யப்பட்டார். பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். தப்பியோடிய மற்றொரு கைதியான Richard Matt, 2 தினங்களுக்கு முன்பு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00