மனிதர்களைப் போல் சமையலறையில் 50 வகை வேலைகளைச் செய்யும் ரோபோட்டுகள் - அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகமும், கூகுள் டீப்மைன்ட் நிறுவனமும் இணைந்து கண்டுபிடிப்பு
Jan 7 2024 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவில் மனிதர்களைப் போன்று சமையலறையில் வேலை செய்ய ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக் கழகமும் கூகுள் டீப்மைன்ட் நிறுவனமும் இணைந்து வீட்டு வேலை செய்வதற்கான இந்த ரோபோட்டுகளை வடிவமைத்துள்ளன. இந்த ரோபோட்டுகள், சமையல் அறைகளில் மனிதர்களின் 50 வகையான வேலைகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை ரிமோட் மூலமும் கட்டுப்படுத்தலாம் என்றாலும் அவற்றை கையாள்வதற்கு பயிற்சி அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.