வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்களில் வெடித்தது வன்முறை... 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 2 பள்ளிகள் தீவைத்து கொளுத்தப்பட்டதால் பரபரப்பு

Jan 7 2024 1:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக பெற்று வருகிறது. அதேநேரம் தேர்தலை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இன்று 12வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 300 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில், 90 பெண்கள், 79 சிறுபான்மையினர் உள்பட ஆயிரத்து 970 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் அவாமி லீக் கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜாட்டியா கட்சிக்கும் இடையேயான கடும் போட்டி நிலவுகிறது.

வங்கதேச பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்த பிறகே தேர்தலை நடத்த வலியுறுத்தி, முக்கிய எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தலை புறக்கணித்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்தநிலையில், 10க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் 2 பள்ளிகளுக்கு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. தேர்தலையொட்டி பாதுகாப்பு பணியில் 8 லட்சம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00