500 நிறுவனங்களில் இருந்து 1.5 லட்சம் பேர் வேலையிழப்பு : கூகுள், மைக்ரோ சாஃப்ட், அமேசான் நிறுவனங்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் வேலையிழப்பு
Mar 22 2023 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடந்த 3 மாதங்களில் மட்டும் 500 நிறுவனங்களில் இருந்து ஒன்றரை லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. கூகுள், மைக்ரோ சாஃப்ட், அமேசான் நிறுவனங்களில் மட்டும் ஒரு லட்சம் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அமேசான் நிறுவனம் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 27 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. பொருளாதார மந்தநிலை, கொரோனா தொற்று தாக்கம் உள்ளிட்டவையே ஊழியர்கள் பணிநீக்கத்துக்கு காரணம் என தகவல் தெரிவிக்கின்றன.