அமெரிக்காவில் இந்திய தூதரகம் மீது கற்கள் வீச்சு : காலிஸ்தான் ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

Mar 21 2023 6:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் கதவு, ஜன்னல்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இந்தத் தாக்‍குதலுக்‍கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00