விண்வெளியில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைத்துவரும் சீனா - சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்‍கள் வாழ்த்து

Jun 18 2021 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
விண்வெளியில் புதிய ஆராய்ச்சி மையத்தை அமைத்துவரும் சீனாவுக்‍கு உலக அளவிலான விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்‍கள் வாழ்த்து தெரிவித்துள்ளன.

விண்வெளியில் மிதக்‍கும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை ஏற்கெனவே அமெரிக்‍கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இணைந்து உருவாக்‍கியுள்ளன. இந்நிலையில், சீனாவும் தனியாக ஒரு ஆராய்ச்சி மையத்தை விண்வெளியில் அமைத்துவருகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள 3 வீரர்கள் தற்போது விண்வெளிக்‍கு அனுப்பப்பட்டுள்ளனர். வரும் 2022ம் ஆண்டுக்‍குள் இந்த மையம் முழுமையாக பயன்பாட்டுக்‍கு வரும் என எதிர்பார்க்‍கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் இந்த விண்வெளி மையத்தை சீனா உருவாக்‍கினாலும், உலக அளவிலான ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இதைப் பயன்படுத்திக்‍கொள்ளலாம் என ஏற்கெனவே அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மிகக்‍குறைந்த கால அளவில் விண்வெளி குறித்து பல ​சாதனைகளை சீனா படைத்துவருவதாக உலக நாடுகள் பாராட்டியுள்ள நிலையில், உலகம் முழுவதும் செயல்பட்டுவரும் விண்வெளி ஆய்வு அமைப்புக்‍கள் சீனாவுக்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்மையில் செவ்வாய் கோளில் இருந்து மண் மாதிரிகளை எடுத்துவந்த சீனா, அங்கே ஒரு ஆராய்ச்சி உலவி மூலம் பல்வேறு விஷயங்கள் குறித்து புதிய தகவல்களை அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00