ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் எதிரொலி : இந்திய பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் யோஷிஹைட் சுகா

Apr 22 2021 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பானில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்தார்.

ஜப்பான் நாட்டின் பிரதமராக யோஷிஹைட் சுகா பிரதமராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக யோஷிஹைட் சுகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். அவர் அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இதற்கிடையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக இந்த மாதம் இறுதி நாட்களில் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பயணத்தின்போது அவர் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தவிருந்தார். அதேபோல் இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அவர் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும் செல்லவிருந்தார். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பிரதமர் யோஷிஹைட் சுகா தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளார். அதேபோல், பிலிப்பைன்ஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00