இந்தோனேசியாவில் பயிற்சியின் போது மாயமான நீர்மூழ்கி கப்பல் - தேடும் பணிகள் தீவிரம்

Apr 22 2021 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோனேசியாவில் பயிற்சியின் போது மாயமான நீர்மூழ்கி கப்பலைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவின் பாலி தீவு அருகே அந்த நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான 'நங்கலா 402' என்கிற நீர்மூழ்கி கப்பலில், ராணுவ வீரர்கள் 53 பேர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பாலி தீவிலிருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து நீர்மூழ்கி கப்பல் மாயமானது. கப்பல் மற்றும் அதில் பயிற்சியில் இருந்த 53 வீரர்களின் நிலைமை என்னவாயிற்று என்று தெரியவில்லை. இதையடுத்து மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும் நீர்மூழ்கி மீட்பு கப்பல்களை வைத்துள்ள ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரிடம் உதவி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான அந்த நீர் மூழ்கி கப்பல் 44 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00