கடற்படையை நவீனப்படுத்த தைவான் அரசு தீவிர முயற்சி : பிரம்மாண்டமான போர்க்கப்பல் கடற்படைக்கு அர்ப்பணிப்பு

Apr 14 2021 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவின் மிரட்டல்களுக்‍கு இடையே புதிய போர்க்‍கப்பலை தைவான் அரசு கடற்படையில் சேர்த்துள்ளது.

தைவான் நாட்டின் கடற்படையில் யூ ஷான் என்ற பிரம்மாண்டமான கப்பல் புதிதாக சேர்க்‍கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரமான மலையின் பெயரை இக்‍கப்பலுக்‍கு சூட்டியுள்ள அந்நாட்டு அரசு, கடற்படையின் பல்வேறு தேவைகளுக்‍கு இக்‍கப்பல் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கெனவே சீனாவின் ஒரு பகுதிதான் தைவான் என்றும், எந்நேரமும் அதைத் தன்வசப்படுத்த தயாராக இருப்பதாகவும் சீனா அறைகூவல் விடுத்துவரும் நிலையில், தைவான் அதிபர் சாய் இங்க்‍வென் கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார். 10 ஆயிரத்து 600 டன் எடையுள்ள இக்‍கப்பலை அந்நாட்டு அரசின் ஆதரவுடன் செயல்பட்டுவரும் CSBC நிறுவனம் கட்டியுள்ளது. இந்நிலையில், கடற்படையை நவீனப்படுத்தும் தைவான் அரசின் நடவடிக்‍கைகளை சீனா உன்னிப்பாக கவனித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00