அமெரிக்காவில் சூடு பிடிக்கும் அதிபர் தேர்தல் - ட்ரம்ப் - ஜோ பிடன் பரஸ்பரம் சரமாரி குற்றச்சாட்டு

Sep 30 2020 8:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் - ஜோபிடன் இடையே முதல்முறையாக நேரடி விவாதம் நடைபெற்றது. இருவரும் ஒருவருக்‍கொருவர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை தெரிவித்து கொண்டனர்.

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் மாதம் 3-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதம் நடத்தப்படுவது வழக்‍கம். அதன்படி, ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் நடைபெற்ற இந்த விவாதத்தில், டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்க விவாதத்தில் ஈடுபட்டனர். ஜோ பிடனை ஊக்க மருந்து சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என டிரம்ப் கூறிய நிலையில், டிரம்ப் வருமான வரி கணக்கு செலுத்துவதில்லை என ஜோ பிடன் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் 70 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், கொரோனாவை தடுக்க டிரம்ப் அரசு தவறிவிட்டதாகவும் ஜோ பிடன் குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து அக்டோபர் 15-ம் தேதி புளோரிடா மாகாணம் மியாமியிலும், அக்டோபர் 22-ம் தேதி டென்னஸி மாகாணம் நாஷ்வில்லிலும் டிரம்பும்- ஜோபிடனும் விவாதம் நடத்துகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00