ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் பொதுமக்களுக்குத் தடை - போலீசார் மற்றும் ஆயுதமேந்திய ராணுவத்தினர் குவிப்பு

Jul 8 2020 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்திருப்பதால், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் இருந்து நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களையும் பிரிக்கும் எல்லைப்பகுதியில் ஏராளமான போலீசாரும், ஆயுதமேந்திய ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கடிதத்துடன் வருபவர்களை மட்டுமே போலீசார் எல்லையைக் கடக்க அனுமதிக்கின்றனர். இரு மாநிலங்களையும் இணைக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சாலைகளில் இது போல் தடுப்புக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆறு மற்றும் நீர்நிலைகளின் வழியாகவே, காடுகளுக்குள் புகுந்தோ நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்திற்குள் அத்துமீறி நுழைந்தால், இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் நான்கரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. கடந்த 1919ம் ஆண்டு, இதே போல் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் விதத்தில் இரு மாநில எல்லைக்குள் வருவோருக்குத் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00