உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி : பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை ஒரு கோடியே 12 லட்சத்தை தாண்டியது

Jul 5 2020 12:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், பாதிக்‍கப்பட்டுள்ளோர் எண்ணிக்‍கை ஒரு கோடியே 12 லட்சத்தை தாண்டியுள்ளது.

சீனாவின் Wuhan நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய பயங்கர உயிர்க்‍கொல்லி நோயான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 213 நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் அமெரிக்‍கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் 29 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்‍கு ஆளாகியுள்ளனர். ஒரு லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர்.

அமெரிக்‍காவுக்‍கு அடுத்தபடியாக Brazil நாட்டில் 15 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 63 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துவிட்டனர்.

ரஷ்யாவில் 6 லட்சத்து 74 ஆயிரத்து 515 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்து 27 பேர் பலியாகிவிட்டனர்.

இங்கிலாந்தில் 2 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ள நிலையில், 44 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து விட்டனர்.

ஸ்பெயின், பெரு, சிலி, உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

உலக அளவில் சிகிச்சை பெற்று வந்த 64 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00