பிரேசிலில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்‍கும் ஆர்வம் அதிகரிப்பு : சூரிய ஒளி தகடு உற்பத்தித் துறையில் சீனா முதலீடுகள்

Feb 21 2020 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசிலில் சூரிய ஒளியில் தயாராகும் மின்சாரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்‍கை அதிகரித்துவருவதால், இத்துறையில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றன.

தென்னமெரிக்‍காவின் மிகப்பெரிய நாடாக விளங்கும் பிரேசிலில் தினமும் குறைந்தது 7 மணிநேரம் அதிக அளவில் சூரிய ஒளி கிடைக்‍கிறது. ஆனால் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பது குறித்த சிந்தனை மிகவும் காலதாமதமாகத் தான் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்‍க அந்நாட்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதையடுத்து பொதுமக்‍கள் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். இதைக்‍ கருத்தில் கொண்டு ஏராளமான சீன நிறுவனங்கள் சூரிய ஒளித் தகடுகளைத் தயாரிக்‍கும் தொழிற்சாலைகளை அங்கு நிறுவியுள்ளன. ரைசன், யிங்லி, ஜின்கோ போன்ற நிறுவனங்கள் அதிக எண்ணிக்‍கையிலான சூரிய ஒளித் தகடுகளைத் தயாரித்துவருகின்றன. சாதாரணமாக ஒரு வீட்டிற்குத் தேவையான மின்சாரம் தயாரிக்‍க இரண்டாயிரத்து ஐநூறு முதல் நான்காயிரத்து ஐநூறு அமெரிக்‍க டாலர்கள் செலவாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00