அமெரிக்காவில் நடைபெற்ற "கிராமி விருதுகள்" வழங்கும் விழா - பிரபல பாப் பாடகர் பில்லி எல்லிஷுக்கு பல்வேறு பிரிவுகளில் 5 விருதுகள்

Jan 27 2020 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக புகழ்பெற்ற "கிராமி விருதுகள்" வழங்கும் விழா அமெரிக்காவில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும், சர்வதேச அளவில் இசைத்துறையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 62-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. விழாவின் தொடக்கத்தில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கூடைப்பந்தாட்ட வீரர் கோப் பிரயன்ட்டுக்கு இசைக் கலைஞர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த விழாவில், 18 வயதான பாப் சிங்கர் பில்லி எல்லிஷ், ஆண்டின் சிறந்த குரல், சிறந்த பாடல், சிறந்த ஆல்பம் உள்ளிட்ட 5 விருதுகளை தட்டிச் சென்றார். லிசோ என்பவர், 3 பிரிவுகளில் கிராமி விருதுகளை வென்றுள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவுக்கு, "Best spoken word album" விருது வழங்கப்பட்டது. "Becoming" என்ற பெயரில் தனது சுயசரிதையை ஆல்பமாக வெளியிட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சிறந்த ஆல்பம் என்ற விருது, ஜான் சாம்சன் என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ராப் ஆல்பம் விருது Igor என்பவருக்கு வழங்கப்பட்டது. சிறந்த ராப் பாடல் விருது, J. Cole-க்கு வழங்கப்பட்டது. Dave Chapelle என்பவர் சிறந்த நகைச்சுவை ஆல்பத்துக்கான விருதை பெற்றார். சிறந்த லத்தீன் பாப் ஆல்பம் விருது, Alejandro Sanz என்பவருக்கு வழங்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00