சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு - பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்

Jan 20 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் Xinjiang மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி நான்கு அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

சீனாவின் தன்னாட்சி பகுதியான Xinjiang Uygur பகுதிக்கு உட்பட்ட Jiashi County-ல் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9.27-க்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளி நான்காக பதிவானது. பூமிக்கு அடியில் 16 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீதிகளுக்கு ஓடிவந்து தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் மூன்று பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கம் பாதித்த பகுதிக்கு அவசர மேலாண்மை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் அனுப்பி வைக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00