லத்தீன் அமெரிக்காவில் நடைபெற்ற புகழ்பெற்ற டாங்கோ நடனத் திருவிழா : இறுதிப் போட்டியில், ஆர்ஜென்டினா - உருகுவே இணைக்கு சாம்பியன் பட்டம்

Aug 26 2014 3:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக டாங்கோ நடன இறுதிப் போட்டியில், ஆர்ஜென்டினா - உருகுவே இணை சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஆர்ஜென்டினாவில் கருவாகி, உருகுவேயில் உருபெற்று வளர்ந்த டாங்கோ நடனம், ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பிய கலாச்சார கூறுகளை உள்ளடக்கியதாகும். டாங்கிரே என்ற லத்தீன் சொல்தான், டாங்கோ சொல்லின் நதி மூலமாகும். 1850-களில் தொடங்கிய டாங்கோ நடனம், தற்போது உலகப் புகழை எய்தியுள்ளது. ஜோடியாக சேர்ந்து ஆடும் டாங்கோ நடனத்தில் பால்ரூம்டாங்கோ, டாங்கோ லிடோ, டாங்கோ சலோன் என பல்வேறு வகைகள் உண்டு. ஆர்ஜென்டினா தலைநகர் பியுனோஸ் ஏரெசில் நடைபெற்ற உலக டாங்கோ நடனப் போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான ஜோடிகள் கலந்துகொண்டன. நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆர்ஜென்டினாவின் செபாஸ்டீன் அகாஸ்டா - உருகுவேயின் லோரெனா கான்சலேஸ் இணை சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹாலிவுட் நட்சத்திரம் வில்லெம் டஃபோர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், இந்த டாங்கோ நடன இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00