நைஜீரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் போகோஹராம் தீவிரவாத இயக்கத்தின் தலைமைத் தளபதி ராணுவத்தினரால் கைது

Sep 20 2014 12:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நைஜீரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் போகோஹராம் தீவிரவாத இயக்கத்தின் தலைமைத் தளபதியை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கத்திய கலாச்சாரத்திற்கு தாங்கள் எதிரானவர்கள் என கூறி வரும் போகோஹராம் தீவிரவாதிகள், நைஜீரியாவில், தங்கள் மதக் கோட்பாடுகள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியைக் கொண்டுவர முயன்று வருகின்றனர். இதற்காக கடந்த 5 வருடங்களாக நைஜீரியாவில் அவர்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்திவருகின்றனர். மேலும், நைஜீரியா முழுவதும் கொலை, கொள்ளை, குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடு, ஆள்கடத்தல் போன்ற கொடூர செயல்களையும் அரங்கேற்றி வருகின்றனர். இதில், கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இ கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நைஜீரியாவின், சிபோக் பகுதிக்குள் நுழைந்த போகோஹராம் தீவிரவாதிகள், அங்கு தேர்வு எழுதிகொண்டிருந்த மேற்கத்திய கல்வி பயின்றுவந்த 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். மாணவிகள் கடத்தப்பட்டு சுமார் 5 மாத காலமாகியும், அவர்கள் எங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியாத நிலையில், இந்த இயக்கத்தினரைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகின்றது.

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தினரிடமிருந்து பயிற்சியும், நிதியும் பெற்று நைஜீரியா நாட்டில் இயங்கி வரும் போகோஹரம் தீவிரவாதிகள், அங்குள்ள சிறுபான்மையின கிறிஸ்தவ மக்கள் மற்றும் பெண்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். மேலும், நைஜீரியாவின் பல முக்கிய நகரங்களையும் கைப்பற்றி, தங்கள் வசம் வைத்துள்ளனர். ஆனால், கடந்த வாரம், அண்டை நாடான கேமரூன் எல்லையில், போட்டோகால் என்ற இடத்தில் இந்த தீவிரவாதிகள் குண்டு வீச்சு நடத்தி அதன் மூலம் ஊடுருவ முயன்றனர். உடனே அவர்களுக்கு கேமரூன் ராணுவத்தினர் பீரங்கி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட போகோஹரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய அரசு அறிவித்தது. இது தீவிரவாதிகளுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் போகோஹரம் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய நபரும் தலைமை தளபதியுமானவரை நைஜீரிய ராணுவம் கைது செய்துள்ளதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் முக்கிய நகரை கைப்பற்றுவதற்காக பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே நுழைய தயாரான போது அந்த இயக்கத்தின் தலைமை தளபதி கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00