எவரெஸ்ட் மலை சிகரத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேறும் வழிகாட்டிகள் 10 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்

Apr 19 2014 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

எவரெஸ்ட் மலை சிகரத்தில் பனிப்பாறை சரிந்து விழுந்ததில் மலையேறும் வழிகாட்டிகள் 10 பேர் உயிரிழந்து விட்டதாகவும், மலையேறும் வீரர்கள் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

29 ஆயிரம் அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் மலையில் ஏறுவது சவால் நிறைந்ததாகும். இந்த சவாலை எதிர்கொள்ள ஆண்டுதோறும் உலகெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான மலையேறும் வீரர்கள் வருகிறார்கள். இதேபோன்று, நேபாளம் வழியாக எவரெஸ்ட் மலைச் சிகரத்தை அடைய புறப்பட்ட குழுவினர், 2-வது முகாமிற்கு சற்று தொலைவில் தங்கியிருந்த நிலையில், எதிர்பாராத வகையில் பனிப்பாறை சரிந்து விழுந்தது. இதில், மலையேறும் வழிகாட்டிகள் 10 பேர் பனிப்பாறையின் கீழே சிக்கி இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் 8 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினரும், மலையடிவார முகாமில் தங்கியிருந்த மலையேறும் குழுவினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிட காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டரும் விரைந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00