மெக்ஸிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் கடும் நிலநடுக்கம் - வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓட்டம்

Apr 19 2014 11:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

மெக்ஸிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, நீண்டநேரம் தெருக்களிலேயே தஞ்சமடைந்தனர்.

மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டி மற்றும் Gurrero மாகாணத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. பசிஃபிக் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள AcaPulco என்ற பகுதியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மெக்ஸிகோ சிட்டியில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக, உயிரிழப்பு மற்றும் சேதங்கள் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில், இது மிகவும் அதிக அளவு ஆகும் என மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் சுனாமி தாக்குதலுக்கான அபாயம் ஏதும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1985-ம் ஆண்டில், மெக்ஸிகோ சிட்டியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00