மலேசிய விமானம், தீவிரவாதிகளால் அஃப்கனிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவுத்துறை திடுக்கிடும் தகவல் - பயணிகள் 239 பேரும் உயிருடன் இருப்பதாக வெளியான புதிய தகவலால் பரபரப்பு

Apr 12 2014 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாயமான மலேசிய விமானம் தீவிரவாதிகளால் அஃப்கனிஸ்தானுக்கு கடத்தப்பட்டதாகவும், அதில் இருந்த 239 பேரும் உயிருடன் இருப்பதாகவும், ரஷ்ய உளவுத்துறை வட்டாரங்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளன.

கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு சென்றுகொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், கடந்த மாதம் 8-ம் தேதி திடீரென மாயமானது. இந்த விமானத்தின் கதி என்ன என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகிவந்தன. விமானம் இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கியிருக்கலாம் எனக் கருதி, அதன் கருப்புப் பெட்டியை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர். இப்பகுதியில் இருந்து கருப்புப் பெட்டியின் சமிஞ்கைகள் வருவதாகவும், விரைவில் விமானம் கண்டுபிடிக்கப்படும் என்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், விமானம் விழுந்து நொறுங்கவில்லை என்றும், தீவிரவாதிகளால் அஃப்கனிஸ்தானுக்கு கடத்தப்பட்டிருப்பதாகவும் ரஷ்யாவின் உளவுத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிருடன் இருப்பதாகவும், அவர்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டு, குடிசைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது. போதிய உணவின்றி, பயணிகள் அனைவரும் தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00