ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க, காஸா எல்லையில் பீரங்கிகளையும், ராணுவத்தினரையும் இஸ்ரேல் குவிப்பு

Aug 25 2014 2:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்ரேல் மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வரும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க, காஸா எல்லையில் பீரங்கிகளையும், ராணுவத்தினரையும் இஸ்ரேல் குவித்து வருகிறது.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் கடந்த 2 மாதமாக கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இடையில் இருதரப்புக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் அதிக நாட்கள் நீடிக்கவில்லை. இருதரப்பும் மாறி மாறி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இதில் அப்பாவி பொதுமக்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஹமாஸ் தீவிரவாதிகள், எல்லையில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியாக பள்ளிகளிலும், மசூதிகளிலும் ஏவுகணைகளை குவித்து வைத்திருப்பதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், நேற்று இஸ்ரேல் பகுதிகளின் மீது தீவிரவாதிகள் ஏவுகணைகள் மற்றும் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், காஸா எல்லையில் ஏராளமான பீரங்கிகளையும், ராணுவத்தினரையும் இஸ்ரேல் குவித்து வருகிறது. இதனால் காஸா எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00