தாய்லாந்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு : புதிய பிரதமராக ராணுவத் தளபதி பிரையூத் சன் ஒச்சா தேர்வு

Aug 23 2014 2:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

தாய்லாந்தில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வுகாண, புதிய பிரதமராக ராணுவத் தளபதி பிரையூத் சன் ஒச்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்தில், கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தாக்சின் ஷினவத்ரா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ஊழல் புரிந்ததோடு அந்நாட்டு மன்னர் புமிபோல் அடுல்யாடெஜை மதிக்காமல் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி அவரது ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. அதன் பின்னர், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அவரது சகோதரி யிங்லக் ஷினவத்ரா தனது சகோதரர் தாக்சின் ஷினவத்ரா -வின் கைபாவையாக செயல்பட்டதால், அவருக்கு எதிராகவும் நெருக்கடி எழுந்தது. எனவே, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து யிங்லக் ஷினவத்ரா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென சுதெப் தாக்சுபன் தலைமையிலான அரசு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டங்களை தாய்லாந்தில் நடத்தி வந்தனர்.

இதனிடையே, யிங்லக் ஷினவத்ரா மீதான அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய வழக்கில், அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், மே மாத தொடக்கத்தில் யிங்லக் மற்றும் 9 கேபினட் அமைச்சர்களை தாய்லாந்து அரசியல் சாசன நீதிமன்றம், பதவி நீக்கம் செய்தது. ஆயினும் யிங்லக்-க்கு கிராம மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்ததால், நீதிமன்ற நடவடிக்கை எத்தகைய பலனையும் ஏற்படுத்தவில்லை.

இவ்வாறாக நீடித்து வந்த அரசியல் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர அங்கு ராணுவம் திடீரென ஆட்சியை கைப்பற்றியதோடு, யிங்லக்கையும் பதவியிலிருந்து இறக்கியது. அதனைத்தொடர்ந்து யிங்லக் உட்பட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களைக் ராணுவம் காவலில் வைத்தது.

இந்நிலையில், தாய்லாந்திற்கு புதிய பிரதமராக இராணுவப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய ஜெனரல் பிரயூத் சன்- ஒச்சாவை தேர்வு செய்ய பாராளுமன்ற குழு தீர்மானித்தது. இதற்கான வாக்குப்பதிவில் அந்நாட்டு பாராளுமன்றத்தின் 197 உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். அதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பிரையூத் சன்னுக்கு ஆதரவாக வாக்களித்ததையடுத்து, அவர் தாய்லாந்தின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். வரும் செப்டம்பர் மாதம் புதிதாக உதயமாகவுள்ள 35 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவைக்கு பிரயூத் சன்- ஒச்சா தலைமை ஏற்க உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00