தைவானில் வீசிய மட்மோ சூறாவளியால் கனமழை - பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன

Jul 24 2014 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

தைவானில் வீசிய மட்மோ சூறாவளி காரணமாக, கனமழை பெய்தது. இதனால், தைவானின் பல நகரங்கள் வெள்ளக்காடாகக் காட்சியளித்தன. வெள்ளத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், ஆபத்தான பகுதிகளில் வசித்து வரும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தைவானை தாக்கிய மட்மோ சூறாவளியால் அங்கு கனமழை பெய்தது. தொடர் கனமழை காரணமாக, தைவானின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. சாலைகளில் தேங்கிய வெள்ள நீரில், வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நின்ற காட்சிகளையும் காணமுடிந்தது. இதனால், பல இடங்களில் போக்குவரத்து தடைப்பட்டதுடன், மரங்களும், மின்கம்பங்களும் சாலைகளில் முறிந்து விழுந்தன. பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தலைநகர் தாய்பே விமானநிலையத்தில், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தைவானின் வடக்குப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி, ஒருவர் உயிரிழந்தார். பல பகுதிகளில் மின்சாரமும் தகவல் தொடர்பும் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால், அப்பகுதிகளில் வசித்து வந்த மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை, பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினர், அங்கிருந்து துரிதகதியில் வெளியேற்றி வருகின்றனர். மேலும், சூறாவளி காரணமாக ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணியிலும் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00