பொலிவியாவில் ராணுவத்துறையில் தலைதூக்கியுள்ள இனப்பாகுபாட்டிற்கு கடும் எதிர்ப்பு - அதிகாரிகள் அல்லாத 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் திடீர் வேலைநிறுத்தம்

Apr 23 2014 10:48AM
எழுத்தின் அளவு: அ + அ -

பொலிவியாவில் ராணுவத்துறையில் இனப்பாகுபாடு தலைதூக்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் அல்லாத வீரர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிவியா நாட்டில் ராணுவத்துறையில் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களை அரசு மிகவும் கண்ணியமற்றமுறையில் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இனவெறி போன்ற பிரச்சனைகளும் தலைதூக்கி இருப்பதாக வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்தும், ராணுவத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டுவரவும் வலியுறுத்தி, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் அல்லாத வீரர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் பொலிவியா நாட்டில் உள்ள லா பாஸ் என்ற இடத்தில் அமைதிப் பேரணி ஒன்றை நடத்தினர். இப்பிரச்னையில் அதிபர் தங்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றும், உள்ளூர்வாசிகளுக்கு ராணுவத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக ராணுவ வீரர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00