அமெரிக்காவின் 29-வது அதிபரான வார்ரென் ஹார்டிங் தனது காதலிக்கு எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியீடு

Jul 31 2014 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவின் 29-வது அதிபரான வார்ரென் ஹார்டிங், தனது 15 வருட கால காதலிக்கு எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்கள், பொதுமக்கள் பார்வைக்கு தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதேநேரத்தில், அவர் ஊழல் மிகுந்த திறமையற்ற நிர்வாகத்தை நடத்தினார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

அமெரிக்காவில் கடந்த 1929-ம் ஆண்டு, 29-வது அதிபராக வார்ரென் ஹார்டிங் பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவரது ஆட்சிக் காலத்தில், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், அதிபராக இருந்த காலத்தில் எழுதிய காதல் ரசம் சொட்டும் கடிதங்கள் தற்போது வெளிவந்துள்ளன. அமெரிக்க அதிபரின் பதவியை அலங்கரித்தவர்களில் அவப்புகழ் பெற்றவர் என்றும், ஊழல் மிகுந்த திறமையற்ற நிர்வாகத்தை நடத்தினார் என்றும் வார்ரென் ஹார்டிங் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன. எனவே, கடந்த 50 ஆண்டு காலமாகவே அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், வார்ரென் ஹார்டிங், அவரது காதலியான கார்ரி பிலிப்பிசுக்கு எழுதிய காதல் கடிதங்களை யாரும் பிரசுரம் செய்யாத வகையில், சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை அவரது குடும்பத்தினர் மேற்கொண்டனர். ஆனால், தற்போது, அதற்கு தடை விலக்கப்பட்டு, கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காதல் ரசம் சொட்டும் கடிதங்களை பார்த்து புத்தகம் எழுதியிருக்கும் ஒருவர், பல்வேறு விதமாக சங்கேத வார்த்தைகளை வார்ரென் ஹார்டிங் பயன்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர், அதிபரானதும் இந்த கடிதம் குறித்த தகவலை வெளியிடாமல் இருக்க, ஆண்டொன்றுக்கு 5 ஆயிரம் டாலர்களை காதலி கார்ரி பிலிப்பிசுக்கு தர சம்மதித்ததாக தெரிகிறது. கடந்த 1923-ம் ஆண்டு வார்ரென் ஹார்டிங், இறந்த பின்னர், அவரது காதலி யார் என்ற யூகங்கள் எழுந்தன. அவர் ஒரு ஜெர்மனி நாட்டு உளவாளி என்றும் பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால், இதனை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00