மக்களின் முதல்வர் ஜெயலலிதா தலைமையின் கீழ், 2013-2014ம் ஆண்டில், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் மிகச் சிறந்த மாநிலமாக தேர்வு - டெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழகத்திற்கான விருதுகளை வழங்கியது "இந்தியா டுடே"

Nov 1 2014 7:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையின் கீழ், 2013-2014ஆம் ஆண்டில், தமிழகம் அனைத்துத் துறைகளிலும் நாட்டின் மிகச்சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் முன்னணி இதழான 'இந்தியா டுடே' அறிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற விழாவில், இதற்கான விருதுகள் வழங்கப்பட்டன. மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தலைமையின் கீழ், விவசாயம் மற்றும் சிறந்த ஆட்சி முறை ஆகியவற்றில் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாக திகழ்வதாக 'இந்தியா டுடே' பாராட்டு தெரிவித்துள்ளது.

மக்களின் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா, மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு கிராமப்புற மக்களின் ஏழ்மையை விரட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விலையில்லா அரிசி, கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், முதியோர் ஓய்வூதியம், பசுமை வீடுகள் என செயல்படுத்தி வரும் அடுக்கடுக்கான திட்டங்களின் பயனாக தமிழகத்திலிருந்து ஏழ்மை, பசி, பட்டினி போன்றவை விரட்டியடிக்கப்பட்டன. விவசாயம், மருத்துவம், உட்கட்டமைப்பு போன்ற துறைகளிலும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது. இப்படி தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்க மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆற்றிவரும் பணிகள் அளவிட முடியாதது.

இந்திய அளவில், கடந்த 2013-2014ம் நிதியாண்டில், பிரபல ஆங்கில இதழான "இந்தியா டுடே", நாடு முழுவதும் நடத்திய கள ஆய்வு இதனை மெய்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 20 பெரிய மாநிலங்களில் சிறந்த ஆட்சி, கல்வித்துறை, விவசாயம், சுகாதாரம், உட்கட்டமைப்பு, முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் மாநிலம் குறித்து 'இந்திய டுடே' பத்திரிகை ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் 'State of states' என்ற அடிப்படையில் ஒட்டுமொத்த துறைகளிலும் தமிழகம் மிகச்சிறந்த மாநிலமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் வேளாண்துறையிலும் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின் படி, செயல்படும் தமிழக அரசில், மாநில உள்நாட்டு உற்பத்தி விழுக்காடு கடந்த ஓராண்டில் 3-லிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது - மருத்துவர்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது - இந்திய அளவில் 27 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் மாற்றப்பட்டு, தமிழகத்தில் 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற உயர்ந்த நிலை எட்டப்பட்டுள்ளது - மருத்துவ கல்வியைப் பொறுத்தவரை கடந்த ஓராண்டில் மட்டும் 80 ஆயிரம் மருத்துவர்கள் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்துள்ளது, இந்திய அளவில் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது - கல்வித்துறையை பொறுத்தவரை உயர் கல்விக்கு இந்திய அளவிலான ஒதுக்கீட்டைக் காட்டிலும், ஒன்று புள்ளி ஐந்து சதவீதம் தமிழகத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயத்துறையின் வளர்ச்சி, மைனஸ் 13 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்ந்துள்ளது - அகில இந்திய அளவில் ஒட்டுமொத்த குறியீட்டு மதிப்பின் அளவு, தமிழகத்தில் 4.74 சதவீதத்திலிருந்து, 5.78 சதவீதமாக உயர்ந்துள்ளது - இது இந்திய மாநிலங்களுக்கிடையே மிகச்சிறந்த சாதனையாக திகழ்கிறது - மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு பல்வேறு துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகளை படைத்துள்ளதைப் பாராட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில் 'State of States' அதாவது, அனைத்துத் துறைகளிலும் சிறந்த மாநிலம் என்ற விருதும், விவசாயத்துறையில் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று சிறந்து விளங்குவதற்காக, தமிழ்நாட்டிற்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள் திரு. ரவிசங்கர் பிரசாத் மற்றும் திரு. வெங்கைய நாயுடு ஆகியோர் இந்த விருதுகளை வழங்க தமிழக வேளாண்துறை அமைச்சர் திரு. அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.

டெல்லியில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதுகள், தமிழகத்திற்கு மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அயராத உழைப்பு மற்றும் மக்கள் நலன் கருதியே அவர் ஆற்றிவரும் சேவைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்லலாம்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00