மக்களின் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறப்பாக செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு கிடைத்த நற்சான்று விருதுகள் - தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க மக்களின் முதல்வர் ஆற்றிவரும் இடைவிடாத மக்கள் நலப் பணிகள்

Nov 1 2014 7:08AM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதா, விவசாயம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, மிகச் சிறப்பாக செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நற்சான்றாக புகழ்பெற்ற ஆங்கில இதழான ''இந்தியா டுடே'' தமிழகத்திற்கு மிகச் சிறந்த மாநிலம் என்ற விருதையும், விவசாயத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் என்ற விருதினையும் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தை நாட்டின் முதன்மை மாநிலமாக உயர்த்த மகத்தான திட்டங்களை நிறைவேற்றிவரும் மக்களின் முதல்வர் செல்வி. ஜெயலலிதா, தமிழக மக்களுக்காக அல்லும், பகலும் அயராது ஆற்றிவரும் பணிகளே இந்த விருதுகளுக்குக் காரணம்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கெல்லாம், சிறந்த மாநிலம் என்ற விருதினை தமிழகம் பெற்றுள்ளதன் பின்னணியில், தமிழக மக்களுக்காக மக்களின் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் இரவு, பகல் பாராத கடுமையான உழைப்பு இருந்து வருகிறது. மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின், தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு ஏழை எளிய நடுத்தர மக்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறார்.

மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு கிராமப்புற மக்களின் ஏழ்மையை விரட்ட பல்வேறு முன்னோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விலையில்லா அரிசி, கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், முதியோர் ஓய்வூதியம், பசுமை வீடுகள் என செயல்படுத்தி வரும் அடுக்கடுக்கான திட்டங்களின் பயனாக தமிழகத்திலிருந்து ஏழ்மை, பசி, பட்டினி போன்றவை விரட்டியடிக்கப்பட்டன. மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழங்கிய விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், இல்லத்தரசிகளின் வேலைப்பளுவை குறைத்து, அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவித்தது. இதனைத்தொடர்ந்து, சுய உதவிக்குழுக்கள் மூலம் நிதி ஆதாரத்தையும், அதன்மூலம் அதிகாரத்தையும் பெற்ற பெண்கள், பல்வேறு துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

கிராமப்புற மக்களுக்கு பசுமை வீடுகள் திட்டம், நகர்ப்புற ஏழை எளிய மக்களுக்கான சிறப்பு வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றின் மூலம் மக்களின் அடிப்படைத் தேவையை மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு உதவித்தொகை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு சத்தான உணவும் வழங்க வகை செய்திருப்பவர், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா. குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மனநல வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த அங்கன்வாடி முதற்கொண்டு குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனத்தில்கொண்டு, அவர்களுக்கு விதவிதமான ருசியான சத்தான உணவையும், உடைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி நடைபெற்று வரும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, சீருடை, மிதிவண்டி, மடிக்கணினி என அவர்களின் கல்வித் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது. மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து மட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள் விரிவாக்கப்பட்டு, நவீன மருத்துவ கருவிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணிநேரமும் மக்களுக்கு சுகாதார சேவை அளிக்கப்பட்டு வருகிறது. மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தொடங்கிய "104" மருத்துவ ஆலோசனை பெறும் திட்டமும், 24 மணிநேரமும் மக்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சைக்கான வழிகாட்டுதலை அளித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் அன்னதான திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் அரசு இந்துக்கள் முக்திநாத், மானசரோவர் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும், கிறித்தவர்கள் ஜெருசலத்திற்கும், இஸ்லாமியர்கள் மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளவும், புனித ரமலான் கொண்டாடவும் மானியத் தொகைகளை தொடர்ந்து அதிகரித்து அளித்து வருகிறது.

தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உறுதியான, திடமான நடவடிக்கைகளை மேற்கொண்ட மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, மத்திய அரசை காவேரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட வைத்தது, முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திட உச்சநீதிமன்ற தீர்ப்பை பெற்றதுடன் அதனை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டது, என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசின் பொதுத்துறைகள் மூலம் வாங்கி, என்.எல்.சியை தனியார் மயத்தில் இருந்து மீட்டு தொழிலாளர்களின் உரிமையை பாதுகாத்தது என எந்த மாநில அரசும் சாதிக்க முடியாத சாதனைகளை மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா சாதித்துக் காட்டியுள்ளார். கச்சத்தீவை மீட்கவும் உறுதியுடன் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மீனவர்கள் நலன்காக்க மீன்பிடி தடைக்கால உதவித்தொகையை உயர்த்தி வழங்கியதுடன், தமிழக மீனவர்கள் இலங்கை உட்பட வெளிநாடுகளில் சிறைபிடிக்கப்பட்டாலும், இன்னலுக்கு ஆளானாலும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களை காப்பாற்றி வருகிறார். தமிழகத்தில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், விலையில்லா மின்சாரம், விதைநெல், உரம், பூச்சிக்கொல்லி மருந்து, தேவைக்கேற்ற கூட்டுறவு கடனுதவி என அனைத்து உதவிகளையும் வழங்கி வரும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படும் தமிழக அரசு, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தறிகளுக்கு இலவச மின்சாரம், நெசவாளிகளுக்கு வீடு கட்டும் திட்டம் என பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் என புதிய திட்டங்கள் மூலம் குறைந்த விலையில் ஏழை, எளிய மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெற்று மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை நெஞ்சார வாழ்த்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, மக்கள் நலன் மேம்பாட்டுக்காக உலக சாதனை படைக்கும் அளவிற்கு, இவ்வளவு நலத்திட்டங்களை அறிவித்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா. மக்களின் முதல்வரின் தொடர் மக்கள் சேவைகளுக்கு இந்திய அளவிலான விருதுகள் மட்டுமல்ல, உலக அளவிலான விருதுகளும் தேடிவரும் என்பது உறுதி.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00