தேனி மாவட்டத்தில் தனியார் பள்ளி சார்பில் Fit India மாரத்தான் போட்டி : மாணவ மாணவிகள் பங்கேற்பு
Dec 11 2019 9:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள தனியார் பள்ளி சார்பில் Fit India மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உடல் திறனை வளர்த்துக் கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், "Fit India திட்டம்" தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் கம்பத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய மாரத்தான், வேலப்பர் கோவில் தெரு, காந்திசிலை வழியாக மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாரத்தானில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.