ஆசிய தடகளத்தில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Apr 24 2019 5:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிய தடகளத்தில் தங்கப்பதக்‍கம் வென்றுள்ள தமிழக வீராங்கனை கோமதிக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை வென்று தந்திருக்கும் தமிழக வீராங்கனை கோமதியைப் பாராட்டி மகிழ்வதாக தெரிவித்துள்ளார்.

800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சாதனைப் புரிந்திருக்கும் கோமதி, திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த ஏழை விவசாயி மாரிமுத்துவின் மகள் என்பது மனதை நெகிழ வைப்பதாக தெரிவித்துள்ளார். இடைவிடாத முயற்சியால் நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கும் வீராங்கனை கோமதி இன்னும் பல உயரங்களை எட்டிப்பிடிக்க வாழ்த்துவதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00