ஹாமில்டனில் நடைபெற்ற கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி - பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை தோற்கடித்தது நியூசிலாந்து

Feb 11 2019 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஹாமில்டன் நகரில் நடைபெற்ற பரபரப்பான கடைசி டி-20 கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி, 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, நியூசிலாந்தின் தொடக்க வீரர்களாக செய்ஃபெர்ட்டும், முன்ரோவும் களமிறங்கினார்கள். முதல் ஓவரிலிருந்தே இருவரும் மட்டையைச் சுழற்றி ரன்களைக் குவித்தனர். 43 ரன்கள் எடுத்த நிலையில், செய்ஃபெர்ட் அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய முன்ரோ, 40 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. இதன்மூலம் இந்தியா வெற்றிபெற 213 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடினமான இலக்கை நோக்கி பேட் செய்த இந்தியா, தொடக்கத்திலிருந்தே வேகமாக ரன்களை சேர்த்தது. இதனால், இந்தியா வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில், இந்தியா வெற்றிக்குத் தேவையான ரன்னை எடுக்கத் தவறியது. பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில், 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து இந்தியாவை தோற்கடித்தது. இதன்மூலம், 2-க்கு ஒன்று என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரைக் கைப்பற்றியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00