உலகக்கோப்பை ஹாக்கி தொடர் - முதல் போட்டியில் தென்னாப்பிரிக்‍காவை தோற்கடித்து இந்தியா அபார வெற்றி

Nov 29 2018 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி, தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்‍க அணியை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது.

உலகக்கோப்பை ஹாக்கி தொடர் ஒடிஷா மாநிலம் புவனேஷ்வரில் டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, சீனா, மலேசியா உட்பட 16 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

சி பிரிவில் பெல்ஜியம், கனடா, தென்னாப்பிரிக்‍கா, இந்தியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, தென்னாப்பிரிக்‍கா அணிகள் மோதின.

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் இந்தியாவின் மந்தீப்சிங் முதல் கோலை அடித்து அணியின் வெற்றியை தொடங்கினார். இந்திய வீரர்கள் ஆதிக்‍கம் செலுத்தியதால் தென்னாப்பிரிக்‍க அணியால் இறுதி வரை கோல் அடிக்‍க இயலவில்லை. இதனால் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் ஆர்ஜென்டினா, ஸ்பெயினுடனும், நியூசிலாந்து, ஃபிரான்ஸ் அணியுடனும் மோதுகின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00