ஓமனில் நடைபெற்ற ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டி - இறுதியாட்டம் ரத்தானதால், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு கூட்டு சாம்பியன் பட்டம்
Oct 29 2018 11:15AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓமனில் நடைபெற்ற ஆசிய கோப்பைகள் ஹாக்கி போட்டியில், இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு கூட்டாக சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய கண்டத்தின் முன்னணி அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியின் இறுதியாட்டத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதி பெற்றன. ஓமன் தலைநகர் மஸ்கட்டில், நேற்று மாலை இப்போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக, இறுதிப்போட்டியை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கும் சாம்பியன் பட்டம் கூட்டாக வழங்கப்பட்டது.