சர்வதேச டெஸ்ட் கிரிக்‍கெட் ஐ.சி.சி. தரப்பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி மீண்டும் முதலிடம் - இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ரன்களைக்‍ குவித்ததால் முன்னேற்றம்

Aug 23 2018 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி 149 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார்.

ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில், கோலி சரியாக பேட்டிங் செய்யாததையடுத்து, தரவரிசையில் மீண்டும் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆனால், நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்ததையடுத்து, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை விராட் கோலி எட்டிப்பிடித்துள்ளார்.

தற்போது 937 புள்ளிகள் பெற்று விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 929 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்ஸன் 847 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும், டேவிட் வார்னர் 820 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00